காதலியின் ஒற்றை புகைப்படத்தை அனுப்பி மாப்பிள்ளை வீட்டாரை கதிகலங்க வைத்த காதலன் பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ் இவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். முத்துப்பிரகாஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவர்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பழக்க காதலாக மாறி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் முயற்சியில் ஈடுபட காதலனை வந்து பெண் கேட்குமாறு அழைத்துள்ளார்.
முத்துப்பிரகாஷ்க்கும் பெண் வீட்டிற்கு சென்று அவரது தந்தையிடம் பெண்ணை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண்ணின் தந்தை இவர்களது காதலை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் அவசர அவசரமாக பெண் வீட்டார் மாப்பிளையைப் பார்த்து நிச்சியதார்த்தம் நடத்தி உள்ளனர்.
இச்சம்பவம் முத்துப்பிரகாஷிற்கு தெரியவர இருவரும் காதலித்தபோது நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சம்பந்தப்பட்ட மாப்பிளைக்கு அனுப்பியுள்ளார். இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை மற்றும் அவரது கும்பத்தினர் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரன் முத்துப்பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




