இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹா்ஷ் வா்தன் நம்பிக்கை தெரிவித்தாா்.

கொரோன ஒரு பெரும் தொற்று இதற்க்கு இன்றவளில் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை அதனால் மக்கள் அனைவரும் இன்னும் அச்சத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர். மருந்து கண்டுபிடிக்காமல் இயல்புவாழ்க்கைக்கு திரும்புவது என்பது மிகவும் கடினமான காரியம்.
அனால் மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் இன்றளவும் தொய்வின்றி நடந்து வருகின்றது. தற்போது நோய்த் தடுப்பு பணிகள் தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு, மத்திய சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் பதிலளித்து பேசினார்.
மேலும் அவர் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு கொரோனா நிலவரத்தை கண்காணித்துக்கொண்டிக்கிறது. அதனால் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனவிற்கான மருந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் என கூறுகிறார்.




