ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று தொடங்கியது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணிகளுக்கான போட்டித் தேர்வை (சிவில் சர்வீசஸ் தேர்வு) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது. அவ்வகையில், நாடு முழுவதும் கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, இறுதியாக அக்டோபர் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கொரோன கட்டுப்பாடுகளை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தேர்வுகளை இன்னும் ஒத்திவைக்க வேண்டும் என கூறி உள்ளார். இந்த அடிப்படையில் தேர்வை மேலும் தள்ளி வைக்கக்கோரி, தேர்வர்கள் 20 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். யுபிஎஸ்சி அளித்த விளக்கத்தை ஏற்று இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று தேர்வு நடைபெறுகிறது. இன்று இரண்டு கட்டமாக தேர்வு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு முதல் தாள் தேர்வு தொடங்கியது. சென்னையில் உள்ள 62 மையங்களில் சுமார் 22000 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விதிமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.
மையங்களில் சமூக இடைவேளை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சனிட்டிஸிர் போட்டு கழுவேண்டும் என பல உத்தரவுகள் விதிக்க படுகிறது. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே தேர்வு அறைக்கு வரவேண்டும்.