85 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பறக்கும் தோசை வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

மும்பையை சேர்ந்த சாலையோர உணவகம் நடத்தி வரும் நபரின் வீடியோ 84 மில்லியன் வியூஸ் கடந்து வைரலாகி வருகிறது. மும்பையில் ஒருவர் அதை கையாண்ட விதத்தால் அவரது வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதுவரை இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் 84 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
தெற்கு மும்பையில் உள்ள ஸ்ரீ பாலாஜி தோசையில் நீங்கள் தோசை அர்டர் செய்தால் தோசை வாணலியில் இருந்து பறந்து உங்கள் தட்டுக்கே வரும். ஸ்டிரீட் ஃபுட் ரெசிபிஸ் எனும் பேஸ்புக் பக்கமானது இந்த கடையை வீடியோ எடுத்து அதை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் பிரபலமான ஒரு தோசை செய்யும் நபர் நம் ஊரில் செய்யும் மசாலா தோசையை மும்பையில் செய்து விற்று வருகிறார். அவர் தோசையை செய்து முடித்ததும் அதை உயரத்தில் பறக்க விடுகிறார். பிறகு பரிமாறுபவர் அந்த தோசையை சரியாக தட்டில் பிடித்து அதை மக்களுக்கு பரிமாறுகிறார்.
Video link : https://fb.watch/3QBfvonrO9/
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியமடைந்து உள்ளனர். கடந்த வாரம் பேஸ்புக்கில் வெளியான இந்த வீடியோ 84.4 மில்லியன் பார்வைகளையும் 13 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர். “மிகவும் அதிசயமான அந்த பையன் வாடிக்கையாளர்களுக்கு தோசையை பரிமாற அதை வானில் பறக்க விடுகிறார்” என்று ஒரு பேஸ்புக் பயனர் தெரிவித்திருந்தார். “அவர் உணவை பரிமாறுவதில் கூட சில கலையை பின்பற்றுகிறார்” என்று மற்றும் ஒருவர் எழுதியிருந்தார்.




