லண்டன் கடல் பகுதியில் டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பெரிய கோடீஸ்வர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டதால் இந்த சம்பவம் நேர்ந்ததாக குறிப்பிடப்படுகிறது. நீர்மூழ்கியில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபர் ஷசாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேர் அந்த நீர் மூழ்கியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




