பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர் .

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஜான் விக் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.ட்விட்டரில் ,பிரதமர் மோடி தனது கணக்கை கடந்த 2009 ம் ஆண்டு narendramodi_in என்னும் பெயரில் உருவாக்கினார்.இந்நிலையில் அந்த தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.கடந்த ஜூலை மாதத்தில்,உலக பிரபலங்களான வாரன் பேப்ட்,ஜெப் பெரோஸ்,ஒபாமா,ஜோ பிடென்,எலோன் மஸ்க் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோர் கணக்குகளை ஒரு கும்பல் முடக்கி பிட்காயின் பயன்படுத்தி நன்கொடை கோரும் செய்தி வெளியானது.அதன்பிறகு அந்த கணக்குகள் மீட்கப்பட்டது.
இதே போல் பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கு ஜூலை மாதத்தில் முடக்கப்பட்டு மீண்டும் மீட்டப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




