Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

December 2, 2021


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் : இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

மேலும், திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த நவ.15 ஆம் தேதி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

“தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரணத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தருதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று (01.12.2021) பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற ஆணையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கு சாதாரணத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி (Video-Conferencing) வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் அவர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேற்று (01.12.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 09.12.2021 அன்று வெளியிடப்படவுள்ளது, அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு, தகவல் பதிவேற்றம் மற்றும் முடிவறிக்கை நிலை, மண்டல அலுவலர்கள் நியமனம், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆன்லைன் தகவல் பதிவு செய்தல், முன்னேற்ற அறிக்கை, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தள நடைமேடை அமைத்தல் மற்றும் முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் குறித்து பேசப்பட்டது.

மேலும்,கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திலிருந்து பெறுதல், விநியோகம் செய்தல் குறித்த பணிகள் மேற்கொள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் மற்றும் கொரோனா தடுப்பு மருந்துகளை இருப்பு வைக்க கிடங்கு வசதிக்கு இடம் தேர்வு செய்தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ! வாக்குப்பதிவு அலுவலர்கள் / வாக்கு எண்ணுகை அலுவலர்கள் / காவல் துறை அலுவலர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவினை நேரலையாக கண்காணித்தல் மற்றும் நுண் மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தல் மற்றும் ஏனைய அனைத்து வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணுகை மையங்களை இறுதி செய்தல், வாக்குப்பதிவு பொருட்களின் இருப்பினை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் திருமதி எ.சுந்தரவல்லி,பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் ஆர். செல்வராஜ்,நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு பா. பொன்னையா, பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) திரு விசுமகாஜன்,முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) திருமதி கு, தனலட்சுமி, முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) திரு கி.அ. சுப்பிரமணியம், உதவி ஆணையர் (தேர்தல்) திரு அகஸ்ரீ சம்பத்குமார், மற்றும் ஆணையத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்”,என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம்” – அஜித்குமார் அறிக்கை

Next Post

தடுப்பூசி ரெண்டு டோஸ் போட்டா மட்டும் போதாது… சீரம் நிறுவனத்தின் முக்கிய விண்ணப்பம்!!

Next Post

தடுப்பூசி ரெண்டு டோஸ் போட்டா மட்டும் போதாது… சீரம் நிறுவனத்தின் முக்கிய விண்ணப்பம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version