உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு பட்டியலினப் பெண் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் என்ற மாவட்டத்தில் உள்ள பட்டியலின் பெண்ணை( 22 ), அங்குள்ள இரண்டு நபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாகத்தெரிகிறது.
மேலும் இந்தச் சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பே நடந்திருந்தாலும் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமைதான் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கான்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவான இரு குற்றவாளிகளைல் பிடிக்கத் தனிப் படை அமைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது