வள்ளுவர் கோட்டத்தை இம்மாதம் இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டம். திருக்குறளையும், திருவள்ளுவரையும் முன்னிலைப்படுத்தி இந்த இடமானது அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் முறையாந பராமரிப்பு இன்றிப் போட்டதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலைமைக்கு வள்ளுவர் கோட்டம் சென்றது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்படும் என அறிவித்திருந்தார். அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் புனரமைப்பு பணிகள் வேமெடுத்தன. ரூ. 80 கோடியில் பிரம்மாண்ட மாற்றங்களுடன் வள்ளுவர் கோட்டை நவீன முறையில் புணரமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

1,600 பேர் அமரக்கூடிய குளிர்சாதன வசதியுடன் கூடிய அரங்கம், இசையோடு கூடிய நீரூற்றுக்கள், திருக்குறள் காட்சிகளுக்கென புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.