தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை,சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்றும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




