உடல் எடையை குறைக்க நாம் ஃபாஸ்டிங் என்ற ஒன்றை கடைபிடித்து வருகிறோம். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி எடை குறைவதோடு, உடலும் புத்துணர்வு பெறும். கிட்டதட்ட இதைப்போல அழகை மெருகேற்ற தான் இந்த ஸ்கின் ஃபாஸ்டிங்(Skin Fasting) முறை கடைபிடிக்கப்படுகிறது. இப்போது உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது இந்த ஸ்கின் ஃபாஸ்டிங்.
ஸ்கின் ஃபாஸ்டிங் என்றால் என்ன?
நாம் பொதுவாக ஃபாஸ்டிங் இருக்கும் போது தண்ணீரைத் தவிர மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அதே போல தான் ஸ்கின் ஃபாஸ்டிங்கும். நமது முகம் மற்றும் உடல் முழுவதும் எந்தவிதமான கெமிக்கல் கொண்ட அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், சருமத்தை பட்டினி போடுவது. பெண்கள், ஆண்கள் என அனைவருமே இதை செய்யலாம்.
நம்மை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நல்ல விஷயம் தான். ஆனால், அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் நன்மை தருகிறதா?
அதிக கெமிக்கல்கள் கொண்ட கிரீம், ஃபேஸ்வாஷ் என பயன்படுத்துகிறோம். ஆனால் அது நம் சருமத்தை பாதிக்குமே தவிர பலன் தராது என்கின்றனர் மருத்துவர்கள். எப்போதுமே கிரீம் பயன்படுத்தும் நபர்கள் இந்த லாக்டவுனில் ஸ்கின் ஃபாஸ்டிங் இருப்பது தோலுக்கு புத்துணர்வு தரும். முகத்திற்கும் அழகு சேர்க்கும். தினமும் மேக்கப் போடும் நபர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். சிலர் எந்நேரமும் மேக்கப் உடன் தான் இருப்பார்கள். அவர்களுக்கு நிச்சயம் ஸ்கின் ஃபாஸ்டிங் நிச்சயம் தேவை.
ஸ்கின் ஃபாஸ்டிங் செய்யும் முறை
குளிக்கும் போது தவிர்த்து சோப் தவிர வேறு எந்த கெமிக்கல் கலந்த கிரீம், பவுடர், லிப்ஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. அவ்வளவு தான் இந்த ஸ்கின் ஃபாஸ்டிங். நம் சருமத்திற்கு நாம் உணவு போல எடுத்துக்கொள்ளும் மேக்கப் இல்லாமல் ஃபாஸ்டிங் செய்ய வைக்கிறோம். வெளியே செல்ல வேண்டிய சூழல் என்றால் மைல்ட் ஆன கிரீம் பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக் பயன்படுத்தாமல் லிப் பாம் பயன்படுத்தலாம்.
ஸ்கின் ஃபாஸ்டிங் செய்யக்கூடாதவர்கள் சரும பிரச்னைகளால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் இதை செய்யக்கூடாது. அவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி கிரீம், மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சோரியாசிஸ் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இது உகந்தது இல்லை.
ஸ்கின் ஃபாஸ்டிங் மூலம் கெமிக்கல் கலந்த பொருட்கள் கொண்டு நம் முகத்தை கெடுக்காமல் கொஞ்சம் காலம் ரெஸ்ட் கொடுக்கிறோம்.முகத்துவாரங்கள் எல்லாம் கிரீம்களால் அடைபடாமல் ரிலாக்ஸ் ஆகும். ஒவ்வொருவருக்கும் சருமத்தின் தன்மை என ஒன்று இருக்கும்.இதன் மூலம் அதை மீட்க முடியும். மேக்கப் போட்டு அதை நாம் இழந்திருப்போம். தினமும் கெமிக்கல் கலந்த மேக்கப் போட்டு வந்தால் சருமத்தின் இம்யூனிட்டி குறைந்துவிடும். அதன்பின் தான் சரும பிரச்னைகளே எட்டிப்பார்க்கும். குறைந்த பட்சம் ஒருவாரம் ஸ்கின் ஃபாஸ்டிங் இருந்தால் நமது சருமத்தில் ப்ளஸ், மைனஸ் தெரிந்து கொள்ளலாம்.
முடிந்தவரை கெமிக்கல் கலந்த மேக்-அப் பொருட்களை பயன்படுத்தாமல் தவிர்ப்போம்.