Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

ரைம்ஸ் பார்த்ததினால் வந்த விளைவு!

September 6, 2020

என்னுடைய நண்பரின் குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் வரை மூன்றாவது மாதம் முகம் பார்ப்பது முதல் குப்புற விழுவது வரை அனைத்தும் சரியாகத்தான் செய்து வந்தது.

அதற்குப்பின் எதுவும் சரிவரச் செய்யவில்லை, எந்த வார்த்தையும் பேச முயற்சிக்கவில்லை, மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பதுமில்லை, தவழுவதற்கு முயற்சிப்பதில்லை, ஒரு வயது ஆனபின்பும் கூட நடக்கத் தெரியவில்லை. இப்படி குழந்தைகள் பிறந்து ஒரு வயது வரை அடுத்தடுத்து செய்யக்கூடிய செயல்பாடுகள் எதையுமே சரிவர செய்யவில்லை.

இந்தப் பாப்பாவ எப்படிங்க விரட்டுறது?!

குழந்தைக்கு உடை!

தயவு செய்து குழந்தைகளிடம் இப்படி சொல்லாதீர்கள்!

அதனால் அவர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று, அக்குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைக்கு எந்தநேரமும் தொலைக்காட்சியில் ரைம்ஸ் போட்டுக் காண்பிப்பதால்தான் இந்த மாதிரி பிரச்சனைகள் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது என்று சொன்னார்கள். அதற்குப்பின், குழந்தைக்கு ஸ்பீச் தெரபி இன்னும் பல சிகிச்சைகள் அளித்தனர்.அதற்குப்பின் அக்குழந்தை மெதுமெதுவாக எல்லாம் செய்ய ஆரம்பித்தது .

இப்போதெல்லாம் எந்நேரமும் டீ.வி யில் ரைம்ஸ் என்று சொல்லப்படும் குழந்தைகள் பாடல்கள்தான் எல்லார் வீட்டிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.

குழந்தைகளின் கண்களைப் பாதிக்கும்

தொலைக்காட்சிக்கு மிக அருகில் இருந்து ரைம்ஸ் பார்ப்பதால், அது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் தொலைக்காட்சியை மிக அருகில் இருந்து பார்த்தால், கண்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இலக்குகளை அடைவது தாமதமாகுதல்

குழந்தைகள் எந்நேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதால், அவர்கள் வளர்ச்சியின் அடுத்தடுத்த இலக்குகளை அடைவதற்குத் தாமதமாகிறது. அதாவது ஒரு குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் முகம் பார்க்க வேண்டும், ஒன்பது மாதத்தில் தவழ வேண்டும், ஒரு வயதினை அடைந்தவுடன் நடக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதால், குழந்தைகள் தங்கள் அடுத்தடுத்த இலக்கினை அடைய முயற்சிப்பதில்லை

குழந்தைகள் இந்த பூமிக்கு வந்தபின்புதான் இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்கின்றனர். அதாவது அவர்களை சுற்றி நடப்பதை வைத்துத்தான் உலகம் எவ்வாறு இயங்குகிறது., எல்லோரும் என்ன மொழி பேசுகிறார்கள் எனத் தெரியும். ஆனால் எப்போதும் ரைம்ஸே பார்த்துக் கொண்டிருப்பதால், அந்த தொலைக்காட்சியில் வரும் கார்ட்டூன் பொம்மைளைத்தான் உலகம் என நம்பும் குழந்தைகள், அதில் வரும் கார்ட்டூன் கேரக்ட்டர்களைத்தான் தன் நண்பர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

அதனால்தான் நம்மிடம் பேசாமல் அமைதியாக இருக்கும் குழந்தைகள், அந்த கார்ட்டூன் மொம்மைகளைப் பார்த்தால் ஏதோ பல நாட்கள் பழகிய மனிதர்களைப்போல் சந்தோசமாக இருக்கிறார்கள். அதாவது உயிருள்ள மனிதர்களிடம் பழகுவதற்குப் பதிலாக; உயிரற்ற கார்ட்டூன் பொம்மைகளைத்தான் உயிருள்ளவைகள் என நம்பித் தன்னுடைய உணர்ச்சிகளை மனிதர்களிடம் வெளிப்படுத்துவதற்குப் பதிலாக கார்ட்டூன் பொம்மைகளிடம் வெளிக்காட்ட ஆரம்பித்து விடுகின்றன.

அதனால் அவர்களின் இலக்குகளை அடைவதிலும் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றனர். ஒன்பது மாதத்தில் தவழ வேண்டிய குழந்தை டி.வி பார்த்துக்கொண்டே இருப்பதால் பத்து, பதினோரு மாதங்கள் ஆகியும் தவழ்வதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது,ஒரு வயதிற்கு மேல் ஆகியும் நடப்பதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது. இதுபோன்ற பல பிரச்சனைகள் குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படுகிறது.

மூளைச் செயல்திறன் குறைதல்

குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருப்பதில் கவனமாக இருப்பதால், அவர்களின் மூளையின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது குழந்தைகள் தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் அவர்களின் மூளைத்திறன் அதிகமாக இருக்கும். ஆனால், எந்நேரமும் தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பதால் அவர்களின் மூளைத்திறன் குறைந்து விடுகிறது.

குழந்தைகள் தூங்குவதில் சிக்கல்கள்

எப்போதும் டீ.வி யில் குழந்தைகள் ரைம்ஸ் பார்த்துக்கொண்டே இருப்பதால், அவர்களின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. அதாவது குழந்தைகள் தூக்கத்தில் அடிக்கடி பயந்து அழுவது, அல்லது ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லாமல் தூங்கும்போதும் விழிப்புடனே இருப்பது. இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

தீர்வு

உங்கள் குழந்தைகளை முற்றிலுமாகத் தொலைக்காட்சி பார்க்கவிடாமல் தடுக்க முடியவில்லை என்றாலும்,தொலைக்காட்சி முன் அவர்கள் செலவிடும் நேரத்தையாவது கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யுங்கள்! மனிதர்களிடம் பேச விடுங்கள்,விளையாட விடுங்கள், அப்போதுதான் உங்கள் குழந்தைகள் உயிருள்ள பொருட்கள் எது; உயிரில்லாத பொருட்கள் எது என்ற வித்தியாசத்தை உணருவார்கள்.

இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தயவுசெய்து தொலைக்காட்சியை அணைத்துவிடுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் மன அமைதியுடன் ஆழ்ந்து தூங்குவார்கள் !.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தங்கம் விலை இன்றைய நிலவரம்!

Next Post

கொரோனா தொற்று குறைந்தாலும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கமாட்டோம்-ரயில்வே வாரியம்

Next Post

கொரோனா தொற்று குறைந்தாலும் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கமாட்டோம்-ரயில்வே வாரியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version