Saturday, June 25, 2022
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் ஹீரோயின்கள்…இதான் காரணமா?

October 1, 2021

கோலிவுட் முதல் பாலிவுட் வரை டாப் ஹீரோயின்களின் பேவரைட் டூரிஸ்ட் பார்ட்டாக மாலத்தீவு மாறிவிட்டது. அப்படி என்ன தான் ஹீரோயின்களை சுண்டி இழுக்கும் விஷயம் மாலத்தீவில் இருக்கு என தெரிந்து கொள்ளலாமா???

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகை வித்யூராமன் தனது கணவர் சஞ்சய் உடன் மாலத்தீவில் ஹனிமூன் டூர் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.

நடிகர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா

பாரா கிளைடிங் செய்தபடி 8 ஆயிரம் அடி உயரத்தில் பாட்டுப்பாடிய மனிதர்! அதுவும் ஏஆர் ரகுமானின் பிரபல பாடல்!

கோவை குற்றாலம் செல்வோருக்கு ‘ஷாக்’ நியூஸ்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம்..!!

திரையுலகினரைப் பொறுத்தவரை நேரமே இல்லையே என கடிகாரத்துடன் போட்டி போட்டு ஓடித் தான் பழக்கம். அப்படிப்பட்டவர்களை கூட கொரோனா வைரஸ் வீட்டிற்குள் கட்டிப்போட்டது. கொரோனா முதல் அலை காரணமாக 7 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவே வீட்டிற்குள் முடங்கியது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள திரைப்பிரபலங்களோ வீட்டில் இருந்த படியே சோசியல் மீடியாவில் பொழுதுபோக்கி வந்தனர். பல கட்ட ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து சுற்றுலாதலங்களுக்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. அப்படி அனுமதி கிடைத்ததுமே டாப் ஹீரோயின்கள் படையெடுத்தது என்னவோ மாலத்தீவிற்கு தான்.

சொர்க்க பூமி மாலத்தீவு

ஆயிரத்து 190 தீவுகளை கொண்ட நாடு மாலத்தீவு. இதில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அழகான வெள்ளை மணல் வெளிகள், தென்னை மரங்கள், பவள பாறைகள் இப்படி வர்ணித்து கொண்டே போகலாம். அப்படி ஒரு அழகான இடமாக மாலத்தீவு திகழ்ந்து வருகிறது. இங்கே உள்ள தீவுகளில் 26 தீவுகள் பவளப்பாறைகளால் உருவானது. கரையில் இருந்துகொண்டே பெரிய பெரிய சுறா மீன்களும், ஆமைகளும், கடல்வாழ் உயிரினங்களும் நீந்தும் அழகை கண்டுகளிக்க நம் இரண்டு கண்களும் பத்தாது என சொல்லும் அளவிற்கு அழகை தனக்குள் வைத்திருக்கும் சுற்றுலா தேசம்.

பிரமிக்க வைக்கும் மாலத்தீவு

இப்படி அழகுக் குவியலின் உருவமாய் இருக்கும் மாலத்தீவை நோக்கி  நடிகைகள் படையெடுத்து வருகின்றனர். அழகான மாலத்தீவின் அழகோடு,  நடிகைகளின் பேரழகு புகைப்படங்கள்  நம்மை மலைக்க வைக்கின்றன. முதல் ஆளாக மாலத்தீவு சுற்றுலாவை ஆரம்பித்தவர் காஜல் அகர்வால் தான், திருமணமான கையோடு மாலத்தீவிற்கு மஜாவாக ஹனிமூன் கொண்டாட கிளம்பினர். போனவர் அங்கேயும் சும்மா இருக்காமல் கடலுக்குள் அடியில் நட்சத்திர ஒட்டலில் ஸ்டே, ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங், கடலை பார்த்தப்படி  டேட்டிங் என போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தெறிக்கவிட்டார்.

View this post on Instagram

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

நடிகைகளின் விருப்பமான இடம்

அவரைத் தொடர்ந்ந்து, நடிகை டாப்ஸி தோழிகளுடன் மாலத்தீவில் சுற்றுலாவைக் கொண்டாடினார். பிகினி உடையில் மாலத்தீவில் வலம் வந்த போட்டோக்களை சோசியல் மீடியாவிலும் டாப்ஸி ஷேர் செய்தார். தமிழில் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே., படங்கள் மூலமாக பிரபலமான ரகுல் ப்ரீத் சிங்கும் பெற்றோர் மற்றும் தம்பியுடன் சென்று ஜாலியாக மாலத்தீவில் ரேஸ்ட் எடுத்துவிட்டு வந்தார். குடும்பத்துடன் போனாலும் இவரும் பிகினி போட்டோ ஷூட் நடத்தாமல் இல்லை. விதவிதமான போஸ்களை தட்டிவிட்டு லைக்குகளை குவித்தார்.

அடுத்து, மாலத்தீவை ஆக்கிரமித்ததும் கார்த்தி பட ஹீரோயின் தான். கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யா ஜோடியாக மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரணிதா, கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யா ஜோடியாக மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் பிரணிதா, மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் செய்ததோடு கடல் சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.

திருமண நாளை காதல் கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவில் கொண்டாடி தீர்த்தார் சமந்தா. கணவர் உடன் போய் இருந்தாலும், கலர்புல் போட்டோ ஷூட்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற தவறவில்லை. என்ன சம்மு இதெல்லாம்? என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு கவர்ச்சி கிளிக்ஸ்களை வாரி இறைத்தார். அவரை அடுத்து மாலத்தீவை அலங்கரித்தது என்றால் குட்டி குஷ்பு ஹன்சிகா தான். பிகினி உடையில் உடலை வில்லாய் வளைத்து போஸ் கொடுத்து அதகளம் செய்தார்.

சமீபத்தில் வேதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிக்பாஸ் ஷிவானி ஆகியோரைத் தொடர்ந்து, லேட்டா போனாலும் லேட்டஸ்டாக கலக்கியிருப்பது ஆன்ட்ரியா தான். விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து இன்ஸ்டாகிராமையே மிரள வைத்துள்ளார்.

கோலிவுட் பட்டியலைக் கேட்டாலே உங்களுக்கு தலை சுற்றுகிறது என்றால், பாலிவுட் லிஸ்ட் தெரிந்தால் என்ன ஆகும். ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்த சோனாக்‌ஷி சின்ஹா, ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், கரீனா கபூர், சாரா அலிகான், கியாரா அத்வானி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

View this post on Instagram

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

எல்லா சேலிபிரிட்டியும் மாலத்தீவு போறாங்க சரி, அங்க விதவிதமா போட்டோ ஷூட் நடத்துவது சும்மா ஃபன்னுகாக மட்டுமா? இல்லை வேற ஏதாவது காரணமா என யோசித்து பார்த்து இருக்கிறீர்களா?. அடுத்தடுத்து நடிகைகள் மாலத்தீவை நோக்கி படையெடுக்க காரணம் அவங்களுக்கு அங்க கொடுக்கப்படுற ஸ்பெஷல் சலுகைகள் தான் என சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் இருக்கும் பிரபலங்கள் மாலத்தீவிற்கு வந்தால் ஓட்டல்களில் அனைத்து விதமான உணவு வகைகளும் இலவசம். அதுவுமே 5 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிற நட்சத்திரங்கள் வந்தால், அவங்களுக்கு ஓட்டல் உணவு மட்டுமின்றி ரீட்டன் டிக்கெட்டையும் மாலத்தீவு அரசே இலவசமாக கொடுத்துவிடுவார்களாம்.

மாலத்தீவில் ஹனிமூன்


நடிகை காஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய பெருமை வித்யூலேகா ராமனையே சேரும். கணவர் சஞ்சய் உடன் மாலத்தீவில் தனது தேனிலவை கொண்டாடிய வித்யூலேகா ராமன் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.


மாலத்தீவு கடற்கரையில் உள்ள சொகுசு ரெசார்ட்டில் கணவருடன் ஹனிமூன் கொண்டாடிய வித்யூலேகா ராமன் மஞ்சள் நிற உடையை அணிந்து கொண்டு அதற்கு மேட்சிங்கான ஹேண்ட்பேக்கை அருகே வைத்தபடி மரத்தின் மீது அமர்ந்திருக்க வித்யூலேகாவின் கணவர் க்ளிக் செய்த அட்டகாச புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

View this post on Instagram

A post shared by Vidyu Raman (@vidyuraman)

அதே நேரத்தில் 10 மில்லியன் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட பிரபலங்கள் மாலத்தீவிற்கு வந்தால் அவங்களுக்கு ஓட்டல், சாப்பாடு, போக வர்ற டிக்கெட் என எல்லாமே இலவசம் என சொல்லப்படுகிறது. இதை எல்லாம் அவங்க நாட்டின் சுற்றுலாவை மேலும் வளர்க்குறதுக்காக மாலத்தீவு அரசாங்கமே செய்வதாகவும், அதுக்காக தான் பிரபலங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர், கலராக மாலத்தீவு புகைப்படங்களை பதிவேற்றுவதாகவும் சொல்கிறார்கள். அப்போ தானே அந்த போட்டோஸை பார்க்குற பலருக்கும் ஒருமுறையாவது மாலத்தீவு போய்ட்டு வந்துடனுங்கிற ஆசை வரும். அதுக்கான மார்க்கெட்டிங் டெக்னிங் தான் நம்ப அழகு ஹீரோயின்களின் போட்டோ ஷூட் ரகசியம்.

பட்ஜெட் எவ்ளோ?

சரி இப்படி நம்மளும் ஒருமுறை மாலத்தீவு போகனுன்னு நீங்க ஆசைப்பட்டால் நிச்சயம் போய்ட்டு வரலாம். நடுத்தர குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக விடுமுறையை கழிக்க ஏற்ற buget free tourist spot ஆக தான் மாலத்தீவு உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு செலவாகும் சுற்றுலா கட்டணங்கள் (இந்திய மதிப்பில்) 2,000 ரூ முதல் 2,500 ரூ மட்டுமே. இங்கு ஒரு நாளைக்கு 80 ரூ முதல் 100 ரூ வரை குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கும். மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாக 2 நாள் பயணமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ இரண்டே மணி நேரத்திலோ சென்றுவிடலாம். 

விமான கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல், விமான டிக்கெட்டுகளுடன் கூடிய முழு பேக்கேஜ்களும் பல கிடைக்கின்றன. இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்கள் இருந்தால் மட்டுமே போதும், நீங்கள் குடும்பத்துடன் சென்று விடுமுறையை கழிக்க ஒரு சொர்க்க பூமி தயார்.

Share this:

  • Twitter
  • Facebook
Previous Post

அதிர்ச்சி… பட்டாசு வெடிக்க தடை… அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Next Post

எச்சரிக்கை!! செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?… முதலில் இதை படிங்க!

Next Post
copper

எச்சரிக்கை!! செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்?... முதலில் இதை படிங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சமந்தா க்யூட் போட்டோஸ்!

June 24, 2022

உடன்குடியில் தொடரும் சட்ட விரோத மண் கொள்ளை !

June 23, 2022

என்.ஐ.ஏ. அமைப்பின் இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்!

June 23, 2022
rashmika

செம மாஸாக வெளியான ’தளபதி 66’ தலைப்பு & ஃபர்ஸ்ட் லுக்..!!

June 21, 2022
vijayakanth

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் வெட்டி அகற்றம்..!!

June 21, 2022
PM Modi

உலக வாழ்க்கைக்கு யோகா அமைதியை தருகிறது: பிரதமர் மோடி..!!

June 21, 2022
Load More

Categories

  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version