ஆந்திராவை சேர்ந்த பவன் கல்யாண் தமிழ்நாட்டில் முருக கடவுளை வணங்கக் கூடாதா என பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக பாஜகவின் மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்ட பலரும் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் சென்னை வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். ஒவ்வொரு சன்னதியாக சாமி தரிசனம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன், அங்கு ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 22 மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பாக கடந்த 15 நாட்களாக நாங்கள் அனைவரும் விரதம் இருந்து வருகிறோம் அதன் காரணமாக வடபழனி முருகன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டோம். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அவரும் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். 22 ஆம் தேதி தான் மாநாடு நடைபெறுகிறது. ஆனால் இன்றைக்கு மக்கள் மாநாட்டுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
அறநிலை துறை அமைச்சர் இதனை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார் அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினார். தற்போது நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம். நிறைய பேர் விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். பொது மக்களுடைய ஆதரவு எங்களுக்கு நிறைய இருக்கிறது பொதுமக்கள் அதிக அளவில் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது அனைத்து வசதிகளும் உள்ளது என்றார்.

நாங்கள் இதுவரை மதத்தை பற்றி பேசவில்லை, முருகரை பற்றி தான் பேசி வருகிறோம். ஆனால் அமைச்சர் பயங்கரவாதம் வரும், மத வெறி வரும் என்றெல்லாம் கூறுகிறார். மதம் குறித்து தொடர்ச்சியாக அமைச்சர்தான் பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழ் கடவுள் முருகனை அவர்கள் ஆராதனை செய்தார்கள். தற்போது நாங்கள் ஆராதனை செய்கிறோம். இதில் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து எது உண்மையான முருகன் மாநாடு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
இப்பொழுது திமுக தோல்வி பயத்தில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் 15 சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 தொகுதியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். பவன் கல்யாண் முருக பக்தர் அறுபடை வீடுகளுக்கு அவர் ஏற்கனவே வந்து விட்டு சென்றிருக்கிறார். இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொள்ளக் கூடாது என்று ஏதாவது இருக்கிறதா சாமி தரிசனம் செய்யக்கூடாது என அமைச்சர் சொல்கிறார் என கேள்வி எழுப்பினார்.
வேலை எடுத்து சுற்றியதின் விளைவாக சூரசம்காரம் நடைபெற்றது. ஜெயிக்க வேண்டும் என்றால் இறைவன் பல அவதாரங்களை எடுப்பார் எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முடிவுகள் வெளியாகும். இந்த ஆட்சி நீட்டிக்கப்படுமா என்பதை முருகன் தான் முடிவு செய்ய வேண்டும். பொதுமக்கள் தான் ஓட்டு போட வேண்டும். நான் தான் ஜெயிக்க வேண்டும் சொல்வது அவரது நம்பிக்கையில் குறையில்லை ஜெயிக்க வைப்பது மக்கள். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லையே, முதலமைச்சரை நோக்கி ஏன் கேள்வி எழுப்பத் தயங்குகிறீர்கள்? டிஆர்பி தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு என்ன சொல்ல போகிறீர்கள்? மத்திய அரசின் நிதி தேவையில்லை நாங்கள் அரசாங்கத்தை நடத்துவோம் என்று கூறுகிறார்கள் மத்திய அரசை பகைத்துக் கொண்டே இருந்தால் எப்படி முடியும் என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.