தி.மு.க. மற்றும் தி.க.வை அழிக்க வந்ததே இந்த வேல் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

பூத் கமிட்டி
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது. 60 ஆயிரம் பூத்களில், 48 ஆயிரம் பூத்களில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் தொகுதிப் பொறுப்பாளர்களையும் அறிவிக்க உள்ளோம். கடந்த 6-ம் தேதி திருத்தணியில் தொடங்கிய வேல் யாத்திரை, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது.

தி.மு.க.வை அழிக்கும் வேல்
இந்த அரசு எங்களைக் கைது செய்தாலும், நாங்கள் தொடர்ந்து வேல் யாத்திரையை மிகவும் வெற்றிகரமாக நடத்தி, 5-ந் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். இந்த வேல் தி.மு.க., தி.க.வை அழிக்க வந்த வேல். தேசத்துக்கு எதிரானவர்களை, துரோகிகளை அழிக்க வந்த வேல். இவ்வாறு அவர் கூறினார்.




