தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரு கட்டங்கள். அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
மேலும் இந்த முறை ஜே.இ.இ முதன்மை தேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது.
இந்நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், jeeadv.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் இந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மொத்தம் 1,50,838 மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய நிலையில், 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்னளர். இவர்களில் 6707 பேர் பெண்கள். இது குறிப்பிடத்தக்கது. சிராக் பாலர், பொது தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 396 மதிப்பெண்களுக்கு 352 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பெண்களில் கனிஷ்கா மிட்டல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் 17வது இடத்தை பிடித்துள்ளார். இதற்க்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.