திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 15 மாவட்டங்களில் ஓத்த்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அதிமுகவின் ஆர்ப்பாட்டம் வரும் 21ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைப்பு என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.