
சுமார் 10கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புதைந்த நுண்ணுயிரிகள் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளன. டைனாசர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவை இந்த நுண்ணுயிரிகள். காலங்கள் உருண்டோடின….கண்டங்கள் பிரிந்தன… கடல்கள் உயர்ந்தன.. பின்னர் வீழ்ந்தன… குரங்குகள் தோன்றின…. அதிலிருந்து மனிதர்கள் தோன்றினர்…அவர்களிடம் இருந்து இந்த நுண்ணுயிரிகளை தோண்டி எடுக்கும் எண்ணமும் தோன்றியது!!! இப்போது, ஒரு ஜப்பானிய ஆய்வகத்தில், ஆராய்ச்சியாளர்கள் இந்த ஒற்றை செல் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் JOIDES Resolution என்ற கப்பலில் ஆராய்ச்சியாளர்கள், கடலின் அடிப்பகுதியில் இருந்து வண்டல் மாதிரிகளை சேகரித்தனர். மாதிரிகள் தென் பசிபிக் கடலில் 20,000 அடி ஆழத்தில்எடுக்கப்பட்டது. இது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதி. மிகக் குறைந்த ஊட்டச்சத்துக்களும் உயிர்வாழ்வதற்கு குறைந்த ஆக்ஸிஜனுமே கிடைக்கிறது. இத்தகைய இடத்தில் எப்படி இந்த உயிரினங்கள் வாழ்கின்றன என்பதே இவர்களின் ஆராய்ச்சியின் நோக்கம்.


இந்த ஆய்வின் முடிவில் 10கோடி ஆண்டுகள் பழமையான வண்டல் மாதிரிகளில் காணப்படும் ஒரு செல் உயிரினம் கூட ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது எழுந்திருக்கும் திறன் கொண்டவை என்பது தெரிய வருகிறது.10 கோடி ஆண்டுகளுக்கு முன் புதைபட்ட நுண்ணுயிரிகளில் 99.1% வரை இன்னும் உயிருடன் இருப்பதையும், சாப்பிடத் தயாராக இருப்பதையும் நாங்கள் கண்டறிந்துள்ளார்கள்.
நுண்ணுயிரிகள் அனைத்து குறிப்பிடத்தக்க செயல்பாடுகளையும் நிறுத்திவிட்டன. ஆனால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வாழ்க்கையின் பிற தேவைகளை வழங்கும்போது அவை மீண்டும் உயிர்த்தெழ தொடங்கின. இது குறித்து தொடர்ந்து ஆராயும் பொது மேலும் பல அறிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.