ஜூனோ செயற்கைக் கோள் நான்கு ஆண்டுகளாக வியாழனையும் அதன் நிலவுகளையும் பரபரப்பாக சுற்றிக் கொண்டிருக்கிறது. பல தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. எனினும் ஜூனோ தொடர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே உள்ளது. அதன் காரணம் முதன்முறையாக, சூரிய மண்டலத்தில் உள்ள விந்தையான பொருட்களில் ஒன்றான வியாழனின் மிகப்பெரிய நிலவான Ganymedeன் வட துருவத்தை படம்பிடித்துள்ளது.
அங்கு, வியாழனின் காந்த மண்டலத்தில் இருந்து தொடர்ந்து பிளாஸ்மா மழை Ganymedeன் பனிக்கட்டி மேற்பரப்பை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. இதனை ஜூனோ அனுப்பியுள்ள புதிய படங்கள் வெளிப்படுத்துகின்றன. Ganymede உண்மையில் மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது. இது முழு சூரிய மண்டலத்திலும் மிகப்பெரிய நிலவு. 5,268 கிலோமீட்டர் (3,273 மைல்) சுற்றளவு கொண்டதாகும். புதன் கிரகத்தை விட பெரியது இந்த நிலவு.
இது பனி மற்றும் சிலிக்கேட் பாறைகளைக் கொண்டுள்ளது. உறைபனியானது ஒரு திரவ நிலையில் இருக்கும் கடலைச் முடியாது., இந்த நிலவின் மையமானது . இந்த மையமானது திரவ இரும்பினால் ஆனது. இது Ganymedeக்கு மற்றொரு தனித்தன்மையை கொடுக்கும் என்று கருதப்படுகிறது. சூரிய மண்டலத்தில் அதன் சொந்த காந்த மண்டலத்தைக் கொண்ட ஒரே சந்திரன் Ganymede தான்,
Ganymede, வியாழன் கிரகத்தைச் சுற்றி வருவதால் அதன் காந்த புலமும் கிரகத்தின் காந்தபுலமும் இணைந்து பிளாஸ்மா துகள்களை உருவாக்குகிறது.
பிளாஸ்மா துகள்களும் எலக்ட்ரான்களும் காந்தப்புலத்துடன் வினை புரிவதால் வலுவான பிளாஸ்மா அலைகளை உருவாக்குகிறது. காந்தப்புலக் கோடுகளுடன் இந்த செயல்பாடு மற்றொரு விளைவையும் ஏற்படுத்துகிறது, அது அரோரா. இங்கே பூமியில், அத்தகைய துகள்கள் துருவப் பகுதிகளில் அதிகம் காணப்படும். அதனால் பூமியில் துருவப்பகுதிகளில் மட்டுமே அரோரா காணப்படும். ஆனால் Ganymedeல் அவை வளிமண்டலத்தில் உயரமான அணுக்களுடன் தொடர்புகொண்டு ஆச்சரியமூட்டும் ஒளி காட்சிகளை உருவாக்குகின்றன. இது மட்டுமல்லாமல் மேலும் பல அரிய தகவல்களையும் ஜூனோ அனுப்பியுள்ளது. தொடர்ந்து அனுப்பும்!!!