
மெய்சிலிர்க்கும் சம்பவங்கள் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? அப்படி ஏற்பட்டிருந்தால் உங்கள் உடலில் உள்ள ரோமம் சிலிர்த்திருக்கும். மெய்சிலிர்ப்புக்கும் ரோமத்திற்கும் என்ன சம்மந்தம் என என்றாவது யோசித்தது உண்டா? மெய்சிலிர்ப்பு எனும் நிகழ்வு விலங்குகளுக்கும் ஏற்படும். குளிர் பிரதேசங்களில் உள்ள ரோமம் நிறைந்த விலங்குகளுக்கு இது உதவிகரமாக இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு ஏன் இப்படி நிகழ வேண்டும்?

ஒரு புதிய ஆய்வில், ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்: மெய் சிலிர்ப்பை உண்டாக்கும் உயிரணு வகைகளும், மயிர்க்கால்கள் மற்றும் கூந்தலை மீண்டும் வளரச் செய்யும் ஸ்டெம் செல்களும் மிகவும் முக்கியமானவை. சருமத்தின் அடியில், மெய்சிலிர்ப்பை உருவாக்கச் சுருங்குகின்ற தசை, மயிர்க்கால்கள் ஸ்டெம் செல்களுடன் வேறு நரம்புகளின் தொடர்பைக் குறைக்க வேண்டியது அவசியம். இதனால் மயிற்கால்களை வளர்க்கும் ஸ்டம்செல்களும் சிலிர்ப்பை உண்டாக்கும் செல்களும் ஒன்றாக செயல்பட வேண்டியது அவசியம். இதன் காரணமாகவே மெய்சிலிர்ப்பு ஏற்படும் போது ரோமம் எழுகின்றது.

மேலும் இந்த ஆய்வில் வெளிப்புற தூண்டுதல்களால் ஸ்டெம் செல்களின் செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் பல ஆண்டுகளை செலவிட்டுள்ளனர் விஞ்ஞானிகள். பொதுவாகவே தோல் என்பது ஒரு கண்கவர் உறுப்பு. இது பல உயிரணு வகைகளால் சூழப்பட்ட பல ஸ்டெம் செல்களைக் கொண்டுள்ளது, மேலும் இது நம் உடலுக்கும் வெளி உலகத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. ஆகையால், அதன் ஸ்டெம் செல்கள் பலவிதமான தூண்டுதல்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்