தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், மேலும் இதனை நீடிக்க வேண்டுமா? என்பது குறித்து தலைமை செயலர் ,ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரொனா தொற்றிற்கு இதுவரை 1 லட்சத்து 99ஆயிரத்து 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மே மாதங்களில் சென்னையை அதிகளவில் தாக்கி வந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது பிற மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதியோடு தமிழகத்தில் ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தமிழக அரசு முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதன் காரணமாக இன்று சென்னையை தவிர பிற மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் தமிழக தலைமை செயலர் சண்முகம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.