சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்காக பிராவோ விளையாடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான பிராவோ. சிஎஸ்கே-யின் வெற்றிக்கு சிறப்பான பங்களித்தார் என்றால் அது மிகையல்ல.
ஆனால் ஐ.பி.எல் 2020 சீசன் தொடங்கும்போது காயத்தால் ஆரம்பப் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதன்பின்னர் அணியில் இடம்பிடித்து விளையாடினார். இந்நிலையில் டெல்லி அணிக்கெதிராக விளையாடும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் பிராவோ விளையாடவில்லை. இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பிராவோ விலகியுள்ளார்.
மேலும், இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் சொந்த நாடு திரும்புவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.




