தொடர் நடந்த மூன்று ஐபில் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது.
இந்த ஐபில் தொடர் ஆரம்ப்பித்ததில் இருந்தே அணிக்கு சற்று சறுக்கல் நிகழ்வுகளே நடந்து வந்துள்ளது. அணியின் உறுப்பினர்களின் கொரோனா பாசிட்டிவ் அறிக்கை, சின்ன தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா குடும்ப சூழ்நிலை காரணமாக ஆட்டத்திலிருந்து விலகியது, பிராவோ இன்னும் ஆடாதது என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியே
இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களில் CSK அணி ஒரு தடவை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களில் டுபிளசிஸ் மட்டுமே ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வண்ணம் ஆடி வருகிறார். ஏனைய ஆட்டக்காரர்கள் விரைவாக ரன் சேகரிக்க தடுமாறி வருகிறார்கள்.
நேற்று ஹைதிராபாத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சென்னை அணி ஏழு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்டத்திற்கு பிறகு வர்ணனையாளார்களிடம் பேசிய கேப்டன் தோனி கூறியதாவது:
என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை. எப்படியாயினும் பந்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.
நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான். பேட்ஸ்மென்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும், 16-வது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம். ஒட்டுமொத்தமாக இன்னும் ஆட்டத்திறன் மேம்பட வேண்டும்.
யாரும் வேண்டுமென்றே கேட்சை விட மாட்டார்கள். ஆனால் இந்த மட்டத்தில் ஆடும்போது, கேட்ச்களை எடுத்தே தீர வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அணி சரியாக ஆடாத போது கேட்ச்கள் தான் நமக்கு வழிகாட்டும்.
இப்படி கேட்ச்களை நாக் அவுட் கட்டத்தில் விட்டால் என்ன ஆகும்? நாக் அவுட் கட்டத்தில் கேட்ச்களை விட மாட்டோம் என்று கூற முடியாது. எனவே நாம் தொழில்பூர்வமாக சிறப்பான பங்களிப்பை இந்த விஷயத்தில் செய்ய வேண்டும்.இந்தப்போட்டியில் பல சாதகமான விஷயங்கள் நடந்தன. எனவே, அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்றார்.