இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர் ஆன யஸ்வந்திர சாகல் இவருக்கு நேற்று நிச்சய தார்த்தம் நடந்தது அவரை இந்தியாவின் துவக்க ஆட்டகாரரான ரோஹித் சர்மா ஒரு மீம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் அது இப்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது.
பிரபல யூ டூயூபரான தனஸ்ரீ வர்மாக்கும், இந்திய முன்னணி சூழல் பந்து பௌலருமான யஸ்வந்திர சாகலுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டனர், நிச்சியதார்த்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அவருக்கு விரேந்தர் சேவாக், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சற்று விசித்தியாசமாக இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா ஒரு மீம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் , அதில் ஒரு வயதானவர் பெங்களூரு ஐ பி எல் அணியின் டி ஷர்ட் போட்டு கொண்டு இருக்கிறார் அவர் பார்ப்பதற்கு சற்று சாகல் போலவே உள்ளார், அந்த மீமில் 2050 இல் சாகல் இப்படிதான் இருப்பார் எனவும் அதுவரை பெங்களூர் அணி ஐ பி எல் கோப்பையை வென்று இருக்காது ரசிகர்கள் அதுவரை காத்து கொண்டு இருப்பது போல் உள்ளது, அந்த மீம் சாஹல் மற்றும் இந்திய,பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியையும் கலாய்க்கும் வண்ணம் உள்ளது இந்த மீம் இப்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.