மயங்க் அகர்வாலுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் பேசிய கோலி, கடந்த 2015ல்lசில ஓவர்களில் தான் விக்கெட் கீப்பிங்கை செய்ய தல தோனி கேட்டுக் கொண்டதாக கூறினார்.
ஆனால் அந்த நேரத்தில் ஹெல்மட் இல்லாமல் தான் இருந்ததால் உமேஷ் யாதவ் மேற்கொண்ட பந்துவீச்சில் தனது முகத்தில் காயம் ஏற்படுமோ என்று பதறினேன் என்று குறிப்பிட்டுள்ளார்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை. வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு கைகொடுப்பது என்னவோ சமூகவலைதளங்கள்தான். ஆதலால்சில நேரலை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
கேப்டன் விராட் கோலியும் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது நேரலை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இதேபோல சக வீரர் மயங்க் அகர்வாலுடன் அவர் மேற்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
கடந்த 2015ல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட்கீப்பர் தோனி பிரேக் எடுப்பதற்காக, கோலியை சில ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதையடுத்து தான் விக்கெட் கீப்பிங் செய்ததாகவும் கோலி தெரிவித்துள்ளார்.அந்த நேரத்தில் உமேஷ் யாதவ் பௌலிங் செய்தநிலையில், தான் ஹெல்மட் இல்லாமல் இருந்ததால் பந்து தன்னை தாக்குமோ என்று தான் அஞ்சியதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.
அதன்பிறகே தோனியின் சுமை தனக்கு தெரியவந்ததாகவும் ஒரே நேரத்தில் தோனி எவ்வாறு நெருக்கடியுடன் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன் ஆகவும் செயல்படுகிறார் என்பது குறித்து அறிந்ததாகவும் கோலி குறிப்பிட்டுள்ளார்.