சாம் கர்ர்ன் நிலைத்து நின்று அரை சதம் அடித்து அசத்த மும்பை அணிக்கு 115 ரன்கள் இலக்காக வழங்கியது சென்னை அணி.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக டு பிளிசி மற்றும் இளம் வீரர் ருதுராஜ் களம் இறங்கினர்.போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ருதுராஜ் ரன் எதுவுமின்றி L.B.W முறையில் அவுட் ஆனார்.அடுத்து வந்த ராயுடுவும் 2 ரன்களில் பும்ரா பந்தில் வெளியேற,அதே ஓவரில் தமிழக வீரர் ஜெகதீசன் முதல் பந்தே டக் அவுட் ஆகி நடையைக்கட்டினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டு பிளசியும் 1 ரன்களில் அவுட் ஆக,சென்னை அணி 3 ரன்களில் 4 விக்கெட் விட்டு கொடுத்து தடுமாறியது.அடுத்து களம் இறங்கிய சென்னை கேப்டன் தோனி ஒரு முனையில் அடித்து ஆட,அடுத்த வந்த ஜடேஜாவும் ஒரு பௌண்டரி அடித்து அசத்தினார்.
6 வது ஓவர் வீசிய போல்ட் பந்தில் ஜடேஜா 7 ரன்களில் வெளியேற,தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனியும்(16 ரன்கள்,16 பந்துகள்) ராகுல் சகார் வீசிய 7 வது ஓவரில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அதனை தொடர்ந்து களம் இறங்கிய தீபக் சகார் டக் அவுட் ஆக,மறுமுனையில் சாம் கர்ர்ன் ஓரளவு அடித்து ஆட, சர்துல்(11 ரன்கள்,20 பந்துகள்) அடித்து ஆட முற்பட்டு சூர்ய குமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.சென்னை 16 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.குர்னால் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் இம்ரான் தாஹிர் ஒரு பௌண்டரியை ஓட விட,கோல்டர் நைல் வீசிய 18 வது ஓவரில் சாம் கர்ர்ன் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரியை ஓட விட்டார்.தாஹிர் பும்ரா பந்தில் ஒரு பௌண்டரி அடித்து அசத்த,சென்னை அணி 100 ரன்களை கடந்தது.
கடைசி ஓவர் வீசிய போல்ட் பந்தில் சாம் கர்ர்ன் தொடர்ந்து 3 பௌண்டரி அடித்து இந்த தொடரில் முதல் அரை சதத்தை கடந்து கடைசி பந்தில் கீளீன் போல்ட் ஆனார்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து மும்பை அணிக்கு 115 ரன்கள் இலக்காக வழங்கியது.
சென்னையில் அதிகபட்சமாக சாம் கர்ர்ன் 52 ரன்கள் எடுத்து இருந்தார்.
மும்பை அணியில் போல்ட் 4 விக்கெட்களும், பும்ரா மற்றும் ராகுல் சகார் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.