இஷான் கிஷன் மற்றும் டி காக்கின் அதிரடியால் மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து இருந்தது.
115 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர்.ஆரம்பம் இருவரும் அதிரடியை வெளிப்படுத்தி மும்பை அணியின் ரன் எண்ணிகையை உயர்த்தினர்.தொடர்ந்து அடித்து ஆடிய இஷான் கிஷன் 50 ரன்களை கடக்க,10 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 98 ரன்களை பெற்று இருந்தது.47 பந்துகளில் 3 ரன்கள் மும்பை அணிக்கு தேவை என்ற நிலையில் சர்துல் வீசிய ஓவரில் டி காக் ஒரு பௌண்டரி அடித்து அசத்த,மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

மும்பை அணியில் இஷான் கிஷன் 68 ரன்களுடனும்,டி காக் 46 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
சென்னை அணியின் அடிமட்டத்தை உடைத்து 4 விக்கெட் கைப்பற்றிய போல்ட்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.




