மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக தொடர்ந்து 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அபு தாபி :
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 ல் வெற்றி பெற்று அசத்தியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பொல்லார்ட் தலைமையில் மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.ரோஹித் ஏன் ஆட வில்லை என்று மும்பை அணியின் அன்றைய கேப்டன் பொல்லார்ட்டிடம் கேள்வி எழுப்பியபோது ரோஹித்தின் வலது கால் தொடையின் சதை பிடிப்பதாகவும் அடுத்து நடக்கவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்குவார் என்று கூறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இப்போது பலப்பரீட்சை நடத்திவருகின்றனர்.ஆனால் இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக மீண்டும் பொல்லார்ட் களம் இறங்கி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.இது மும்பை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.மும்பை அணி ஏற்கனவே 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.இன்னும் ஒரு போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுவிடும்.அடுத்தடுத்த போட்டிகள் மும்பை அணிக்கு முக்கிய போட்டிகளாக உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாமல் இருப்பது குறித்து மும்பை அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
ஐ.பி.எல் தொடர் முடிவடையும் நிலையில் அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் சுற்று பயணம் செய்ய தயாராக உள்ளது.இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் காயம் அதிகரித்தால்,அடுத்த இந்திய அணியில் தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.