ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லோமோர் 47 ரன்களை சேர்க்க, ஆர்சிபி அணியில் சஹால் 3 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில், ஆர்சிபி அணி இலக்கை துரத்தியது. தொடக்க ஆட்டக்காரரான பின்ச் 8 ரன்களில், ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதையடுத்து, களமிறங்கிய கோலி, இளம் வீரர் தேவ்தத் படிக்கலுடன் சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தேவ்தத் ஒரு புறம் சீரான இடைவெளியல் பந்துகளை சிக்சர் மற்றும் பவுண்டரிக்கு விரட்ட, மறுமுனையில் கோலி அவருக்கு உறுதுணையாக நின்றார். வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என, பந்துவீச்சாளர்களை ஸ்மித் பல கலவையில் பயன்படுத்தினாலும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.
இதனிடையே, நடப்பு தொடரில் தேவதத் படிக்கல் தனுது 3வது அரைசதத்தையும், கோலி தனது முதல் அரைசத்தையும் நிறைவு செய்தனர். 63 ரன்கள் எடுத்திருந்த போது, ஆர்ச்சர் பந்தில் சிக்சர் அடிக்க முயன்ற தேவ்தத், க்ளீன் போல்டாகி வெளியேறினார். இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்த கோலி 72 ரன்களை சேர்க்க, 19.1 ஓவரில் பெங்களூர் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. மறுமுனையில் டெவிலியர்ஸ் 12 ரன்களை சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.




