உலகின் சிறந்த ஒருநாள் வீரராக விராட் கோலி தேர்ந்தெடுத்து ஐசிசி விருதை வழங்கியுள்ளது.

துபாய் :
சர்வதேச கிரிக்கெட் களத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் சிறப்பாக கிரிக்கெட் விளையாடிய சிறந்த கிரிக்கெட் வீரர்கள் யார் என்பதை வாக்கெடுப்பு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு விருது கொடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கவுரவித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த டி20 வீரர், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது என வெவ்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார் இந்திய கேப்டன் கோலி.
Read more – “நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கட்டாயம்” : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் அவர்கள் என்றுமே மறக்க முடியாத நினைவு பரிசை கொடுத்துள்ளது ஐசிசி. இதற்காக மும்பையில் உள்ள கல்ச்சர் ஷாப் மற்றும் ஓவிய கலைஞர் பிரதாப் சால்கேவுடன் இணைந்து இந்த விருதுகளுக்கு ஐசிசி வடிவம் கொடுத்துள்ளது




