இந்த வருடத்திற்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கு பெறுகிறது இந்நிலையில்சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் 2 வீரர்கள், உதவியாளர், வலை பயிற்சி பவுலர்கள் உட்பட மொத்தம் 13 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிப்படைந்துள்ளது அவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப் பட்டனர். மேலும் அனைத்து சிஎஸ்கே முகம் வீரர்களையும் இன்னும் சில நாட்கள் தனிமையில் இருக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டனர் இதனால் சிஎஸ்கே அணி பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது .
சிஎஸ்கே அணி தவிர மற்ற 7 அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்தும் நாட்கள் முடிவடைந்த நிலையில் அவர்கள் பயிற்சியைத் தொடங்கினார்.
இதில் இந்திய அணி மற்றும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய அணியுடன் இணைந்து வெகு நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
160 நாட்களுக்குப்பின் தற்போது தான் பேட்டை கையில் எடுத்துள்ளேன் அறைக்குள்ளே சென்று முதல் சில பந்துகளை எதிர்கொள்ளும்போது மிகவும் பயத்துடன்தான் இருந்தது ஆனாலும் கூட நாங்கள் எதிர்பார்த்ததைவிட எங்களது முதல் வலை பயிற்சி சிறப்பாக அமைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் ஊரடங்கு காலத்திலும் நாங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டால் தற்போது வலுவாக இருப்பதை உணர்கிறேன். இதனால் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது இதுவே ஒருவேளை உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் வலைப்பயிற்சியில் சந்திக்கும் பந்துக்கு ஏற்றார்போல் உடலை அசைப்பது மிகவும் கடினமாக இருக்கும் .
எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர் சபாஷ் நதிம், சாகல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள் அவர்கள் பந்து சரியான இடத்தில் பிக் செய்யப்பட்டன சிறப்பான முறையில் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு இருப்பதில் மகிழ்ச்சியுடன் இருந்ததாக வீராத் கோலி தெரிவித்தார்