Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

’கானகத்தைத் தேடும் கானப் பறவைகள்’….கண்டுகொள்வரா கனவான்கள்?

October 25, 2020

அழிந்துவரும் காடுகளையும் கானப்பறவைகளையும் மீட்டெடுப்பது நமது தலைசிறந்த கடமைகளில் முதலிடம்பெறத்தக்கவையாகும்.

அழிகின்ற செல்வம் தேடி

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஓடும்என்  நாட்டுத் தோழரே….

அழியாத செல்வ மென்ற

தோர்அதி சயமாம் காடு,

கழனிகள் தானென் என்றும்

அழியாத செல்வ மாகும்!

கலையான பறவை கள்தன்

னெச்சத்தில் விதைகள் தூவும்…

மலைபோன்ற நரனே நாமும்

விதையொன்று வைப்போம் இன்று ! ( அறுசீர் கழிநெடிலடி ஆசிரிவிருத்தம் -யாப்பிலக்கணம்)

சங்க இலக்கியம் காலந்தொட்டு, உலகெங்கிலுமுள்ள அத்துணை வளஞ்சேர் மொழிகளிலும் வாய்மொழிகளிலும் எழுத்தெண்ணிப்பார்த்துப் படித்து புளங்காகிதமடைகிற ஒரு பரவசம் மனிதர்களுக்குக் கிடைக்குமென்றால் அது பறவைகள்தான்.

இறக்கைகள் உடைய இருகால் பறவைகளைப் பாடவும் அதனைப் போற்றவும் நமக்குத் தமிழின் சொற்களே போதாதென்றால் அதன் குணவளத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்வதும் அத்தியாவசியம் . அந்தப் பறவைகள் தான் தானுண்ட உணவினை எச்சமாக்கி அகிலத்தின் சுமைதாங்கும் பூமியில் மற்றொரு பசுந்தளிர் தழைத்து, ஆகாயத்தை முட்டும் வகையில் ஒரு விருட்சம் வளரப் பிரதியுபகாரமின்றித் தூவுறது.

முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும்  பறவைகளின் கூருணர்திறன் அபாரமானது. காக்கை கூட்டினுள் முட்டையிடும் குயில் முதற்கொண்டு,கானமயில் என்று இந்திய நாட்டின் பறவையின் சின்னமாக உள்ளதன் தோகைகள் கண்டு பரவசமடைதாவர் யாருண்டு இப்பூமியில்?

இதில் பறக்கமுடியாத பறவைகளெனத் தீக்கோழிகளும் பென்குயில்களும், டோடோக்கள் போன்ற எத்தனையோ உள்ளன. அன்னப் பறவைகள் இலக்கியத்தில் உள்ளது அது தன் இணையுடன் சேரும்போது அத்தனை வலிகளைப்பொறுத்துக் கொள்ளுமாம், ஆனால் வேறொரு இணையுடன் சேராது என்ற கூற்றும் உள்ளது.

நெடுந்தொலைவு சென்று மீண்டும்தன் பழைய வாழ்விடத்திற்கே திரும்பும் அளவு ஆற்றல்கொண்ட அலையும்  வல்லூறுகள், கூருணவு அதிகமும் அதிக அறிவும் கொண்டதாக 360 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பித் தன் எதிராளிகளைத் திகைக்க வைப்பதும், பல சின்னஞ்சிறு உயிரினங்களைத் தொலைவிலிருந்து பார்த்து அதைக் கவ்வி செல்லும் இரவுநேரப் பறவைஆந்தை, சாகும்வயதில் தன் சிறகுகளைக் கொத்திகொத்தி மரணத்தை வென்று மீண்டும் இளமைக்குத் திரும்பும் கோல்டன் இனக்கழுகு என இவையெல்லாம் லியனார்டோ டாவின்சியின் கண்ணுக்கு ஒரு அதிசயமாகத் தெரிந்திருக்கும் இல்லையென்றால் பதினைந்தாம் நூற்றாண்டில் அபாரமான த் அறிவாற்றல் கொண்ட அறிஞர் தன் ஏட்டில் ஒரு விமானம் வானில் பறப்பதற்கான தொழில்நுட்பதை கணிதத்தின் துணையுடன் வரைந்து அதைப்பற்றிப் பரிசோதித்துப் பார்த்திருக்க முடியுமா? அவரது முயற்சிக்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் ரைட்சகோதர்களின் முயற்சியால் பறவையைப் போல் மனிதன் பறக்க முடியுமென்ற ஆசைக்கனவு இலட்சியம் எஞ்சின்கொண்ட அலுமினியப் பறவையான விமானம் வடிவில் வெள்ளைப் பெட்ரோல் எனும் எரிபொருளால் இயங்கி வேறோரு கண்டத்தைச் சிலமணிநேரங்களில் கடக்கும் அசாத்தியம் சாத்தியமானது.

அப்படிப்பட்ட மனித இனம் மேலும் சில தொழில்நுட்பத்தையும் அவனது இனத்தையும் அறிவாலும் ஆற்றலாலும் விருத்தியாக்கிட,  பூமியைச் செழிப்பாகிட இயற்கையைப் பாதுக்காகப் போராடும் சுவீடிஸ் நாட்டு இளம்பெண் கிரேட்டா தன்பெர்க்கை போன்று நாம் அனைவரும் போராட வேண்டுமென்பதில்லை.

ஆனால் அப்பெண் இயற்கைச் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்க வேண்டுமெனக் கூறுவதிலுள்ள நியாயத்தையும் நாம் பூமி அழிந்து வருவதிலும் அண்டார்டிக், ஆர்டிக் பனிப்பாறைகள் உலக வெப்பமயமாததால் நச்சையும் நமக்கு எடுத்துக் கூறுவதை நாம் புரிந்துகொண்டு இயறகையைப் பாதுகாப்பது குறித்த முன்னெடுப்பில் முதல் முக்கியமான கானகத்தையும் மரங்களையும் பாதுகாப்பது ஆகும்.

சிலநாட்களுக்கு முன் தமிழகத்தில் ஒரு பகுதியில் மரத்தை அதிகாரிகள் வெட்டியுள்ளனர். அங்குக் கூடுகட்டிக் குடும்பம் நடத்தி அத்தனை காலம் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த அந்த இடத்தின் தன் வாழ்விடம் சிதைக்கப்பட்டது கண்டு, வாழ எங்குக் குடிபெயர்வது எனத் தெரியாமல் திகைத்து அதே இடத்தில் பைத்தியம் பிடித்தமாதிரி அலகிறது என் காதில் விழுகிறது…

பறவைகள் மீது காதல் கொண்டு பறவைகளைக் குறித்த ஆய்வில் தனது வாழ்நாளை ஒப்படைத்து பறவையியலில் உலகப் புகழ்பெற்ற சலீம் சலியின் வாழ்வுதான் எத்தனை பாடங்களைப் போதிக்கிறது நமக்கு !

இயற்கை நலம் விரும்பிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பறவைகள் ,விலங்குகள்.  நம் மனித இனதிற்கு முன்னோடி அவை.

அவற்றை நாம் பேணிக்காப்பது நமது கடமை.

பூமியிடமிருந்து உணவைப் பெற்று மீண்டு அதன் பலனை பூமிக்கே தரும் அவற்றை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு நாம் சொத்து சுகங்களை அனுபவித்து ஏசியில் வாழ்ந்தாலும் அதன் பாவம் இயற்கைப்பேரழிவிலும், தட்ப வெப்த்தாக்கத்திலு, சீதோஷ்ணக் கெடுதலிலும் வந்து தாக்கும்.

ஏனென்றால் இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தாலே நமக்குத்  தெரியும்.

பாரதிபோல் நாம் காக்கை குருவிகளுக்குச் சோறிட வேண்டாம் அது இருக்கும் இருப்பிடமான கானகத்தை அழித்து செல்போன் டவர்கள், விளைநிலங்கள் கட்டாமல் இருந்தாலே நாம் அவைகளுக்குச் செய்யும் நன்றி அதுவேயாகும்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பிரபல ‘ SAMSUNG ‘ நிறுவன அதிபர் ’லீ குன் ஹீ ’காலமானார்… மக்கள் கண்ணீர் அஞ்சலி

Next Post

’சாமி சன்னிதிக்கு வந்து பாயாசம் சாப்பிடும் முதலை’….வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

Next Post

’சாமி சன்னிதிக்கு வந்து பாயாசம் சாப்பிடும் முதலை’….வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version