Monday, April 20, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

நவராத்திரி நாயகி குலசை வாழ் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவினை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

October 16, 2020

இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்து மிக பிரமாண்டமாக தசரா திருவிழா கொண்டாடப்படுவது குலசையில் மட்டுமே.

Mutharamman

தூத்துக்குடியில் உள்ள உடன்குடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த குலசேகரன்பட்டினம் என்னும் ஊர் உள்ளது. இது மக்களால் குலசை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஞானமூர்த்தி சமேத ஸ்ரீ முத்தாரம்மனாக அம்பிகை வீற்றுருக்கிறாள்.

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

2000 மினி கிளினிக்குகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தின் தெய்வ மனுஷி மாடத்தி அம்மன் வரலாறு

dasara 1

பாண்டிய மன்னர்கள் கடலினுள் இருந்து முத்துக்களை எடுத்து வந்து இந்த அம்மனுக்கு ஆபரணங்கள் அணிவித்ததால் முத்தாரம்மன் என்று பெயர் வந்தது எனவும், முத்து + ஆற்று+ அம்மன் அதாவது உடலில் முத்துக்களை போல வரும் அம்மை நோயை இந்த அம்மன் ஆற்றுவதால் முத்தாரம்மன் என பெயர் வந்தது எனவும் கூறுகின்றனர்.

மகிஷாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவி பத்து நாள் விரதமிருந்து பத்தாம் நாள் சூரசம்ஹராம் நடத்திய நிகழ்வை தசரா திருவிழாவாக கொண்டாடுவதாக வரலாறு கூறுகிறது.

Dasara 2

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இந்த கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். அதில் இருந்து பக்தர்கள் அனைவரும் காப்புக்கட்டி விரதம் இருப்பர். வேண்டுதல் இருப்போர் தங்கள் உருவங்களை மாற்றி அதாவது வேடமிட்டு வீதிகளில் அலைந்து அம்மனுக்கான காணிக்கையை பெறுவர்.

இந்த தசராவுக்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரடி, குரங்கு, புலி, சிங்கம், பெண், குறவன், குறத்தி, ராஜா, ராணி என அவர்களால் என்ன முடியுமோ அந்த வேடத்தை அணிவர்.

Dasara 3

தூத்துக்குடியில் இருந்து புலம் பெயர்ந்த மக்களில் முக்கால்வாசி பேர் இந்த தசராவிற்காக சொந்த ஊர் வருவர். வீதி முழுவதும் வேடங்கள் அணிவதற்கான பொருட்கள் விற்கும் கடை போடப்படும். அந்தந்த ஊரை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மக்களை மகிழ்விப்பர். வீடுகளுக்கு சென்று முத்தாரம்மனுக்கு காணிக்கை என்று கூறினால் மறு பேச்சு இல்லாமல் மக்கள் காணிக்கை இடுவர்.

அசைவம் சேர்க்காமல் ஒரு பொழுது அதுவும் பச்சரிசி சோறு தின்று, கால்களில் செருப்பணியாமல், மது, புகைப்பழக்கம் இல்லாமல், தரையில் தூங்கி, கடுமையான விரதம் இருந்து தசராவிற்காக வேடமணிவர். ஏதேனும் வேண்டுதல் வைத்து இத்தனை வருடங்களுக்கு தசராவுக்கு வேடம் இட்டு காணிக்கை எடுப்பதாக மக்கள் வேண்டி கொள்வார். அதற்கு ஏற்றார் போல் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஊருக்கு வந்து காப்புக்கட்டி வேடமணிந்து காணிக்கை பெறுவர்.

பத்தாம் நாள் இரவு கோவிலின் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அன்று அனைவரும் கோவிலில் தங்கி சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் குளித்து காப்பினைக் கழட்டுவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தாரம்மன் பிரசித்தி பெற்ற அம்மனாக இருக்கிறாள். அம்மாவட்டத்தில் முத்தாரம்மன் கோவில் இல்லாத கிராமங்கள் கிடையாது, வீட்டில் ஒரு பிள்ளைக்கு முத்தாரம்மன் பெயரிடுகின்றனர்.

Dasara 4

கடற்கரையோரம் வீற்றிருக்கும் முத்தாரம்மனைக் காண அலை கடலென மக்கள் வெள்ளம் திரண்டு வந்து அம்மன் அருளை பெற்று செல்கின்றனர்.

ஊரடங்கு காலத்தால் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் முத்தாரம்மனின் இந்த போற்றியை கூறி அம்மன் அருளை பெறலாம்.

Dasara 5

1. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே  போற்றி
2. ஓம் ஸ்ரீஞான அகிலாண்ட நாயகியே  போற்றி
3. ஓம் ஸ்ரீஞான அருமையின் வரம்பே  போற்றி

4. ஓம் ஸ்ரீஞான அறம்வளர்க்கும் அம்மையே  போற்றி
5. ஓம் ஸ்ரீஞான அரசிளங் குமரியே  போற்றி
6. ஓம் ஸ்ரீஞான அப்பர்ணி மருந்தே  போற்றி

8. ஓம் ஸ்ரீஞான அருந்தவ நாயகியே போற்றி
9. ஓம் ஸ்ரீஞான அருள்நிறை அம்மையே போற்றி
10. ஓம்ஸ்ரீஞான ஆலவாய்க்கரசியே  போற்றி – 10
11. ஓம் ஸ்ரீஞான ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
12. ஓம் ஸ்ரீஞான ஆதியின் பாதியே போற்றி
13. ஓம் ஸ்ரீஞான ஆலால சுந்தரியே போற்றி
14. ஓம் ஸ்ரீஞான ஆனந்த வல்லியே போற்றி
15. ஓம் ஸ்ரீஞான இளவஞ்சிக் கொடியே போற்றி
16. ஓம் ஸ்ரீஞான இமயத் தரசியே போற்றி
17. ஓம் ஸ்ரீஞான இடபத்தோன் துணையே போற்றி
18. ஓம் ஸ்ரீஞான ஈசுவரியே போற்றி
19. ஓம் ஸ்ரீஞான உயிர் ஒவியமே போற்றி
20. ஓம் ஸ்ரீஞான ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி -20
21. ஓம் ஸ்ரீஞான எண்திசையும் வென்றாய் போற்றி
22. ஓம் ஸ்ரீஞான ஏகன் துணையே போற்றி
23. ஓம் ஸ்ரீஞான ஐங்கரன் அன்னையே போற்றி
24. ஓம் ஸ்ரீஞான ஐயம் தீர்ப்பாய் போற்றி
25. ஓம் ஸ்ரீஞான ஒப்பில்லா அமுதே போற்றி
26. ஓம் ஸ்ரீஞான ஓங்காரசுந்தரியே போற்றி
27. ஓம் ஸ்ரீஞான கற்றோருக்கு இனியோய் போற்றி
28. ஓம் ஸ்ரீஞான கல்லார்க்கு எளியோய் போற்றி

29. ஓம் ஸ்ரீஞான கடம்பவன சுந்தரியே போற்றி
30. ஓம் ஸ்ரீஞான கல்யாண சுந்தரியே போற்றி -30
31. ஓம் ஸ்ரீஞான கனகமணிக்குன்றே போற்றி
32. ஓம் ஸ்ரீஞான கற்பின் அரசியே போற்றி
33. ஓம் ஸ்ரீஞான கருணை யூற்றே போற்றி
34. ஓம் ஸ்ரீஞான கல்விக்கு வித்தே போற்றி
35. ஓம் ஸ்ரீஞான கனகாம்பிகையே போற்றி
36. ஓம் ஸ்ரீஞான கதிரொளிச்சுடரே போற்றி
37. ஓம் ஸ்ரீஞான கற்களை கடந்த கற்பகமே போற்றி
38. ஓம் ஸ்ரீஞான காட்சிக்கிளியோய் போற்றி
39. ஓம் ஸ்ரீஞான காலம் வென்ற கற்பகமே போற்றி
40. ஓம் ஸ்ரீஞான முத்தார காமாட்சி அம்பிகையே போற்றி -40
41. ஓம் ஸ்ரீஞான முத்தாரம்மா அம்பிகையே போற்றி
42. ஓம் ஸ்ரீஞான கிளியேந்திய கரத்தோய் போற்றி
43. ஓம் ஸ்ரீஞான குலச்சிறை காத்தோய் போற்றி
44. ஓம் ஸ்ரீஞான குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
45. ஓம் ஸ்ரீஞான கூடற்கலாப மயிலே போற்றி
46. ஓம் ஸ்ரீஞான கோலப் பசுங்கிளியே போற்றி
47. ஓம் ஸ்ரீஞான சம்பந்தன ஞானத்தாயே போற்றி
48. ஓம் ஸ்ரீஞான சக்திவடிவே போற்றி
49. ஓம் ஸ்ரீஞான சங்கம் வளர்த்தாய் போற்றி

50. ஓம் ஸ்ரீஞான சிவகாம சுந்தரியே போற்றி -50
51. ஓம் ஸ்ரீஞான சித்தம் தெளிவிப்பாய் போற்றி
52. ஓம் ஸ்ரீஞான சிவயோக நாயகியே போற்றி
53. ஓம் ஸ்ரீஞான சிவானந்த வல்லியே போற்றி
54. ஓம் ஸ்ரீஞான சிங்கார வல்லியே போற்றி
55. ஓம் ஸ்ரீஞான செந்தமிழ் தாயே போற்றி
56. ஓம் ஸ்ரீஞான செல்வத்துக் கரசியே போற்றி
57. ஓம் ஸ்ரீஞான சேனைத் தலைவியே போற்றி
58. ஓம் ஸ்ரீஞான சொக்கர் நாயகியே போற்றி
59. ஓம் ஸ்ரீஞான சைவநெறி நிலைக்கச்செய்தோய் போற்றி
60. ஓம் ஸ்ரீஞான ஞானாம்பிகையே போற்றி -60
61. ஓம் ஸ்ரீஞான ஞானப்பூங்கோதையே போற்றி
62. ஓம் ஸ்ரீஞான தமிழர் குலச்சுடரே போற்றி
63. ஓம் ஸ்ரீஞான திருவுடையம்மையே போற்றி
64. ஓம் ஸ்ரீஞான திசையெல்லாம் புரந்தாய் போற்றி
65. ஓம் ஸ்ரீஞான திரிபுர சுந்தரியே போற்றி
66. ஓம் ஸ்ரீஞான திருநிலை நாயகியே போற்றி
67. ஓம் ஸ்ரீஞான தீந்ர்தமிழ்ச் சுவையே போற்றி
68. ஓம் ஸ்ரீஞான தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
69. ஓம் ஸ்ரீஞான தென்னவன் செல்வியே போற்றி
70. ஓம் ஸ்ரீஞான தேன்மொழியம்மையே போற்றி -70

71. ஓம் ஸ்ரீஞான தையல் நாயகியே போற்றி
72. ஓம் ஸ்ரீஞான நற்கனியின் சுவையே போற்றி
73. ஓம் ஸ்ரீஞான நற்றவத்தின் கொழுந்தே போற்றி
74. ஓம் ஸ்ரீஞான நல்ல நாயகியே போற்றி
75. ஓம் ஸ்ரீஞான நீலாம்பிகையே போற்றி
76. ஓம் ஸ்ரீஞான நீதிக்கரசியே போற்றி
77. ஓம் ஸ்ரீஞான பக்தர்தம் திலகமே போற்றி
78. ஓம் ஸ்ரீஞான பழமறையின் குருந்தே போற்றி
79. ஓம் ஸ்ரீஞான பரமானந்த பெருக்கே போற்றி
80. ஓம் ஸ்ரீஞான பண்மைதைந்த பெருக்கே போற்றி -80
81. ஓம் ஸ்ரீஞான பவளவாய்கிளியே போற்றி
82. ஓம் ஸ்ரீஞான பசுபதி நாயகியே போற்றி
83. ஓம் ஸ்ரீஞான பாகம் பிரியா அம்மையே போற்றி
84. ஓம் ஸ்ரீஞான ஞான பாண்டியா தேவியின் தேவி போற்றி
85. ஓம் ஸ்ரீஞான பார்வதி அம்மையே போற்றி
86. ஓம் ஸ்ரீஞான பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
87. ஓம் ஸ்ரீஞான பெரிய நாயகியே போற்றி
88. ஓம் ஸ்ரீஞான பொன்மயிலம்மையே போற்றி
89. ஓம் ஸ்ரீஞான பொற்கொடி அன்னையே போற்றி
90. ஓம் ஸ்ரீஞான மங்கள நாயகியே போற்றி -90

91. ஓம் ஸ்ரீஞான மழலைக்கிளியே போற்றி
92. ஓம் ஸ்ரீஞான மனோன்மயித்தாயே போற்றி
93. ஓம் ஸ்ரீஞான மண்சுமந்தோண் மாணிக்கமே போற்றி
94. ஓம் ஸ்ரீஞான மாயோன் தங்கையே போற்றி
95. ஓம் ஸ்ரீஞான மாணிக்க வல்லியே போற்றி
96. ஓம் ஸ்ரீஞான மீனவர்கோன் மகளே போற்றி
97. ஓம் ஸ்ரீஞான மீனாட்சியம்மையே போற்றி
98. ஓம் ஸ்ரீஞான முழுஞானப் பெறுக்கே போற்றி
99. ஓம் ஸ்ரீஞான முக்கண் சுடர்விருந்தே போற்றி
100.  ஓம் ஸ்ரீஞான யாழ்மொழி யம்மையே போற்றி -100
101. ஓம் ஸ்ரீஞான வடிவழ கம்மையே போற்றி
102. ஓம் ஸ்ரீஞான வேலவனுக்கு வேல்தந்தாய் போற்றி
103. ஓம் ஸ்ரீஞான வேதநாயகியே போற்றி
104. ஓம் ஸ்ரீஞான சவுந்தராம்பிகையே போற்றி
105. ஓம் ஸ்ரீஞான வையகம் வாழ்விப்பாய் போற்றி
106. ஓம் ஸ்ரீஞான அம்மையே அம்பிகையே போற்றி
107. ஓம் ஸ்ரீஞான அங்கையற்கண் அம்மையே போற்றி
108. ஓம் ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மனே
 போற்றி! போற்றி!! போற்றி!!!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வீரபாண்டிய கட்டபொம்மனை, வணங்கி நினைவு கூர்கிறேன் – முதலமைச்சர் பழனிசாமி

Next Post

ஓ பன்னீர் செல்வத்தின் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு…

Next Post

ஓ பன்னீர் செல்வத்தின் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version