தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் “ஷேரு” என பெயரிடப்பட்டுள்ள 3 வயது ஆன ஆண் சிங்கத்தை தத்தெடுத்து இருக்கிறார். இது குறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நடிகர் சிவகார்த்திகேயன் “ஷேரு” என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு கண்டிப்பாக ஷேரு சிங்கத்தின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் “எந்தவொரு தனிநபரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு விலங்கைத் தத்தெடுக்கலாம், இதன் மூலம் நீங்க பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு மற்றும் தீவன தேவைகளை நீங்கள் கவனித்துக்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் இதே பூங்காவில் ஒரு பெண் யானையை 6 மாதங்களுக்கு தத்தெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.