தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை ஆகஸ்ட் 10 முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன் ஒருபகுதியாக கோவில்கள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று 3 மாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களை மட்டும் திறக்க அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது. ஆனாலும், சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் கோவில்களை அனுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கோவில்களை திறப்பது குறித்து பேசியுள்ள முதலமைச்சர்:
சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை ஆகஸ்ட 10 முதல் திறக்கலாம். 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் வரும் வழிபாட்டு தலங்களை ஆட்சியரின் அனுமதியுடன் திறக்கலாம் என்றார்.
சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டு தலங்களை திறக்கலாம்.வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசிக்கலாம் என கூறினார்.
அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் வரும் 10ந்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.