சென்னை மணலி கிடங்கிலிருந்து 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை உடனே அகற்றுங்கள் என சுங்கத்துறைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!!!
லெபனானில் உள்ள துறைமுகத்தில் 2450 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக வந்துள்ளதுசிலதினங்களுக்கு முன்பு திடீரென வெடித்து சிதறியது. இதில் பலபேர்பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டது இந்நிலையில் சென்னை துறைமுகத்திலும் இதுபோல் அமோனியம் நைட்ரேட்டை வைத்துள்ளதாக வந்த தகவலின்படி விசாரித்ததில் அந்த தகவல் உறுதிசெய்யப்பட்டது
தற்போது சென்னை மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியிருப்புகளுக்கு அருகாமையில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதால் உடனடியாக அகற்ற உத்தரவு.கிடங்கை சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் வீடுகள் இல்லை என ஏற்கனவே சுங்கத்துறை கூறியிருந்தது.அது முற்றிலும்தவறான தகவல் என்று நிரூபணமாகி உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் 12,000 குடியிருப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது