கோவையில் பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய இளைஞரின் குடும்பத்துக்கு, பாஜக உதவித்தொகை வழங்கியுள்ளது.

பாஜகவின் அரசியல் தமிழகத்தில் ஏதாவது ஒரு வகையில் அனைவரது வீடுகளில் புகுந்து வருகின்றது.
கோவையில் பெரியார் சிலைக்கு காவி பூசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியது. அடுத்ததாக திருவள்ளுவர் சிலை, பாண்டிச்சேரியில் எம்ஜிஆர் சிலை, கன்னியாகுமரியில் பேரறிஞர் அண்ணாசிலை என அனைத்துக்கும் காவி விவசாயம் மற்றும் துணிகள் அணியப்பட்ட விவகாரம் திராவிடக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு பிரச்சனை சென்றது.

கோவை பெரியார் சிலைக்கு காவி பூசியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அருண் என்பவர் இந்த வழக்கில் போலீசில் சரணடைந்தார். அவர் மீது தேச விரோத சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில், தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக 50ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த அணியின் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.