தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7ம் தேதி திறக்கப்பட்டது

ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை விடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இயங்குகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதுவிற்பனை 170 கோடிக்கு மேல் இருக்கிறது. மற்ற நாட்களில் 100 கோடி அளவில் இருக்கிறதாக கூறப்படுகிறது.
சென்னையில்மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் கிட்டத்தட்ட 650 டாஸ்மாக் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும் என்பது சந்தேகத்திற்குரியது, ஏனெனில் தமிழக அரசு லாக் டவுன் ஐ மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது இதை இன்று அரசுக்கு சொந்தமான தமிழக மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் உறுதிபடுத்தியுள்ளது
மூடப்பட்ட மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பது குறித்து தங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என்றன டாஸ்மாக் உடனான உயர் வட்டாரங்களும் இதை உறுதிப்படுத்துகிறது.