சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் உட்பட் 10 பேரை கைது செய்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் சிபிஐ அதிகாரிகளுக்கு உதவி செய்த மதுரை சிபிஐ அதிகாரிக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.