தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும், தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் தேங்காய் சேர்த்து வழங்க கோரியும் தென்காசி மாவட்ட பா.ஜ.கவினர் சார்பில் 1,000 தேங்காய்களை பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளுடன் வழங்கி பா.ஜ.க விவசாய அணி மாவட்ட தலைவர் முத்துப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர்கள் விஜயசேகர், ராகவன், மாவட்ட விவசாய பிரிவு பொருளாளர் ஹரிரங்கநாதன் ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன் ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 80 பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்தனர்.