நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி மத்திய அரசின் EIA சட்டம் குறித்து தன் கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டு இருந்தார் அதில்.

இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களை நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை. ஆனால் தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள்(EIA) நம் இந்திய நாட்டின் சுற்றுச் சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்து இருப்பதாகவே தோன்றுகிறது.
மரங்களையும் விவசாய நிலங்களை மறைத்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலை அமைப்பது நிச்சயம் வளர்ச்சியில்லை என்றும் இந்த வரைவு அறிக்கையில் பல முக்கியத் திட்டங்களை மக்கள் கருத்துகேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலே நிறைவேற்றலாம் என்கின்ற சரத்தே அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது.

இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும். அறிஞர்கள் ஆய்வாளர்கள் கருத்துக்களும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டுவர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் என கார்த்தி தனது அறிக்கையில் கூறிஇருந்தார்.
கார்த்தியின் அறிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சூர்யா கருத்து தெரிவித்துள்ளார் அதில்.
காக்க காக்க..சுற்றுச்சூழல் காக்க…சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து மக்கள் மவுனமாக இருக்க கூடாது என்றும். சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து மக்கள் மவுனம் காப்பது ஆபத்தானது என சூர்யா குறிப்பிட்டுள்ளார் ஏற்கனவே தஞ்சை பெரியகோயில் விவகாரத்தில் ஜோதிகாவிற்கு ஆதரவாக சூர்யா குரல் குடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




