இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
கோவை:
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது : என் உயிர்போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி, இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலுபேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது, எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று தெரிவித்து அரசியல் பயணத்தில் இருந்து விலகினார்.
Read more – இந்தியாவுடன் மோதுவது சீனாவுக்கு நல்லதல்ல : விமானப்படை தளபதி எச்சரிக்கை
இந்தநிலையில், அரசியல் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக இருந்த தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்.காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம்.மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை என்றார்.
மேலும், 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கைப் பண்புகள் பாழடைந்து விட்டன. திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார், நான் போகிறேன், வரமாட்டேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.