துணிகளை கிழித்தும், ஊசியால் குத்தியும் கணவன் டார்ச்சர் செய்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோன்மணி (29) என்பவருக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (32) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவன் அரவிந்துக்கு (தண்ணீர் லாரி உரிமையாளர்) குடிப்பழக்கம் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதத்தில் மனைவியை டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனோன்மணி அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு கோபித்துக்கொண்டு வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று, தனது பெற்றோர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் தன் சாவுக்கு காரணம் தனது கணவர்தான் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், இரவு நேரங்களில் குடித்துவிட்டு வந்து தூங்கவிடாமல் அடித்து துன்புறுத்தியதாகவும், ஆடைகளை கிழித்தும், ஊசியால் குத்தியும் டார்ச்சர் செய்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




