வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழட்டிவிடப்படலாம் என்று பாஜகவில் அண்மையில் இணைந்த தலைவரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.

வடஇந்தியாவில் இருந்து நடிகையாக தமிழகத்தில் நுழைந்து இயக்குநர் சுந்தர் சி.யை திருமணம் செய்தவர் நடிகை குஷ்பு. பின்னர் திமுகவில் இணைந்தார். அதிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து செய்தித் தொடர்பாளர் பதவியையும் வகித்தார்.
இந்நிலையில் அண்மையில் அவர் பாஜகவுக்குத் தாவி காங்கிரஸ் கட்சி மீதும் திமுக மீது குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டரில் நடிகை குஷ்பு கூறும்போது, “வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் கூடுதல் சுமை என்ற காரணத்தால் காங்கிரஸை திமுக அணி கழற்றி விடக்கூடும். 2021 தேர்தல் கூட்டணிகளில் மிகப்பெரிய அலவில் மாற்றம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.கூடுதல் சுமை என நினைத்து காங்கிரஸை திமுக கழட்டி விட்டாலும் ஆச்சர்யம் இருக்காது” என்றார்.




