தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,426 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்மட்டும் 97,575 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று மருத்துவக் நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

- ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2,9,16,23,30) ஆகிய தேதிகளில் எந்தவித தளர்வுகளுமின்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளுக்கும் 1.8. 2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
- அதில் தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு என அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கையில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது.
- ஊராட்சி பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள் அதாவது 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தேவாலயங்களில் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும் , பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
- காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கி வந்த நிலையில் தற்போது இக்கடைகள் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப் பட்ட மாற்ற கடைகள் தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்க அனுமதி
- அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய மற்றும் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதி
- பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூட கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.
- தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போதுள்ள நடைமுறையின்படி எந்தவிதமான தொடர்புகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்
- அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.