திருச்செந்தூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்க உள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் இன்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
ம.பி. முதல்வர்
திருச்செந்தூரில் வரும் 7-ஆம் தேதி நிறைவடைய உள்ள வேல் யாத்திரையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின் வேளாண் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்த சட்டத்தின் மூலமாக பல இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு மிகுந்தப் பயனுள்ள திட்டமாக உள்ள இந்தத் திட்டத்துக்கு எதிராக டெல்லியில் சில அரசியல் அமைப்புகள் தூண்டுதலால் போராட்டம் நடத்தப்படுகிறது.

ஆதரவு
தமிழகத்திலும் விவசாயிகள் திருத்தச் சட்டத்தை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தவறாக சித்தரித்து போராட்டத்தைத் தூண்ட முயற்சித்தது. ஆனால், அது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பா.ம.க.வினர் போராடி வருகின்றனர். அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தலித் சமூகத்தில் ஐந்து உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பது குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வரும்.

வரவேற்பு
ரஜினிகாந்த் ஒரு சிறந்த ஆன்மிகவாதி. தேசிய சிந்தனை கொண்டவர். அவர் புதிதாக அரசியல் இயக்கம் ஆரம்பித்தால் பா.ஜ.க. வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.




