சாப்பாடு சாப்பிடும் போட்டியில் 2 கிலோ பிரியாணியை வெறும் 13 நிமிடத்தில் சாப்பிட்டு முடித்த நபருக்கு வெற்றியாளர் கோப்பையும் பரிசும் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூலன்கோடு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் பக்தர்களை உற்சாகப்படுத்த ஆண்டுதோறும் விநோதமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு பூலன்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில் உள்ளூர்வாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் வினு என்பவர் கலந்துகொண்டு வெறும் 13 நிமிடத்தில் 2 கிலோ பிரியாணியை சாப்பிட்டு முடித்தார். அவருடைய சாப்பிடும் திறமையை கண்டு நடுவர்கள் அசந்துபோனார்கள். பிறகு மக்களின் ஆதரவோடு வெற்றியாளராக வினு அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 2 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக அதேபகுதியில் நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டியில் வினு பங்கேற்றுள்ளார். அப்போது அவர் 43 பரோட்டாக்களை குறைந்த நிமிடத்தில் சாப்பிட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.