அரையாண்டு தேர்வு எப்பொழுது மற்றும் அந்த தேர்வும் ஆன்லைன் தேர்வா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு இப்பொழுது படிப்படியாக குறைந்து பல தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது.இந்தநிலையில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.அதற்கு தமிழக அரசும் அனுமதிக்கவில்லை.
ஜூன் மாதம் முதல் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன.அரையாண்டு தேர்வுகள் எப்பொழுது என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்பட இருக்கிறோம் .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது.அந்த தேர்வானது எப்பொழுது என்ற கேள்விக்கு விரைவில் விடை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.மேலும் அவர் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது என்று அவர் கூறினார்.