Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

புரவி புயல் : டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு-தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் எச்சரிக்கை

December 4, 2020

புரவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வுமையத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
புரவி புயல்
புரவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மாலை வரை அதே பகுதியில் நிலவக்கூடும். இது மேலும் பின்னர் தொடர்ந்து வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக ராமநாதபுரம் வழியாக மேற்கு தென்மேற்கு திசை நோக்கி மெதுவாக நகர்ந்து நாளை மாலை தெற்கு கேரளப் பகுதியை அடையக்கூடும்.

அடுத்த 2 நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

திருப்பதி – திருமலையில் கொட்டித் தீர்த்த கனமழை: மலைப்பாதைகளில் ஆவேசத்துடன் பாயும் காட்டாறு!!

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை கொள்ளிடத்தில் 36 செ.மீ. மழையும், சிதம்பரத்தில் 34 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பெய்த அளவில் 11 இடங்களில் அதிகனமழையும், 20 இடங்களில் மிக கனமழையும், சுமார் 50 இடங்களுக்கு மேல் கனமழையும் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த அக்.01 முதல் இன்று வரையான காலகட்டத்தில் இயல்பு அளவு 373 மி.மீ. இந்தக் காலகட்டத்தில் பெய்த மழை அளவு 364 மி.மீ. இது இயல்பை விட 2 சதவீதம் குறைவு.

நேற்றுவரை இயல்பைவிட 16 சதவீதம் குறைவாக இருந்த வடகிழக்குப் பருவமழை இன்று 2 சதவீதம் குறைவாக உள்ளது. நமக்கு நேற்று 14 சதவீதம் மழை கிடைத்துள்ளது.
அதிகனமழை
அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரையில் கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் வேலூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும், வடமாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் நாளை காலை வரை இப்பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்துவரும் 2 தினங்களுக்கு மழை தொடரும். சில பகுதிகளில் கனமழையாக இருக்கும். இந்த நிலை ராமநாதபுரம் பகுதியில் தொடர்ந்து இருப்பதால் தொடர்ந்து கடற்பகுதியிலிருந்து மேகக்கூட்டங்கள் நகர்ந்து வருவதால் மழை நீடிக்கும். அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதுவும் இல்லை. இப்போதைக்கு இதுதான் நிலை. இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் மேலே வர வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

35,000 ஊதியத்தில் தமிழக அரசில் வேலை : இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க…

Next Post

ஒதுக்கப்படும் காங்கிரஸ்.. இவிஎம் மிஷின் மட்டும் காரணம் இல்லை என நிரூபித்த ஐதராபாத் தேர்தல் முடிவுகள்

Next Post

ஒதுக்கப்படும் காங்கிரஸ்.. இவிஎம் மிஷின் மட்டும் காரணம் இல்லை என நிரூபித்த ஐதராபாத் தேர்தல் முடிவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version