யாரையும் சுட்டிக்காட்ட இது சரியான நேரம் அல்ல, ஆனால் நான் இதைச் சொல்ல வேண்டும்,
எனது விமானத் தொழிலில் நான் அனுபவித்த மிகவும் சவாலான ஓடுபாதையில் கரிபூர் ஒன்றாகும். ஓடுபாதை வழிகாட்டுதல் விளக்கு அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது, ஓடுபாதை பிரேக்கிங் நிலைமைகள் தொடர்ந்து அங்கு கண்காணிக்கப்படுவதில்லை.
ஒரு டேபிள் டாப் ஓடுபாதையில் நைட் கண்டிஷன் + கன மழை & காற்று என்பது எந்த விமானிக்கும் ஒரு கெட்ட கனவு
கடந்த ஆண்டுகளில் பலமுறை தரையிறங்கிய உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறேன்.
விமானத்தில் முதல் சொல் பாதுகாப்பு.
ரெஸ்ட் இன் பீஸ் கேப்டன் தீபக் சாத்தே & கேப்டன் அகிலேஷ்.அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கல் என்று கேரளாவைச் சேர்ந்த ஏர்லைன் பைலட் கேப்டன் ஆனந்த் மோகன்ராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்